திலினி பிரியமாலியுடன் தொடர்பில் இருந்த பிரபலங்கள்! வரவு வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பில் கிடைத்த தகவல்
பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புடைய பலரது தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை
இதன்படி, திலினி பிரியமாலியுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகைகள், அறிவிப்பாளர்கள் மற்றும் பேஷன் மாடல்களின் வங்கிக் கணக்குகள் தற்சமயம் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கலைஞர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வங்கிக் கணக்குகள் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
கடந்த 29ஆம் திகதி, நடிகை செமினி இட்டமல்கொடவிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார், அவரது வங்கிக் கணக்குப் பதிவுகளைப் பெறுவதற்கும் ஏற்பாடு செய்தனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
