நாட்டில் கோவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 526ஆக உயர்வடைந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு குருணாகல் போதனா வைத்தியசாலையில் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஹோமாகம தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவர், கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்புக்கு கோவிட் தொற்று, நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 87 ஆயிரத்து 465 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 84 ஆயிரத்து 253 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இதன்படி, இன்னும் இரண்டாயிரத்து 687 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
