முத்தையன்கட்டில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு விசேட பாதுகாப்பு
புதிய இணைப்பு
முத்தையன்கட்டில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதி ஊர்வலம் பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு மத்தியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
முத்தையன்கட்டுகுளம்- இடதுகரை இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம் இன்றையதினம் (11) அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில்,பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிற்கு இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசியிலிருந்து 07.08.2025 அன்று இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு கடமை
இதன்போது, ஐவர் முகாமிற்கு சென்ற நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இறந்தவரின் உடலம் இன்றையதினம் 1 மணியளவில் அடக்கம் செய்ய இருக்கும் நிலையில் கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில். பொலிஸார்,விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri