கோட்டா கோ கமவில் அடிப்படைவாத மற்றும் பிரிவினைவாத சக்திகள்: சுதந்திரக் கட்சி
காலிமுகத் திடலில் அமைந்துள்ள எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் கோட்டா கோ கம போராட்டத்தை அழிக்க முயற்சிக்கும் அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாத அணிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் இயங்கும் போராட்ட களத்திற்குள் பல்வேறு அடிப்படைவாத மற்றும் பிரிவினைவாத சக்திகள் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக அண்மையில் பண்டாரநாயக்க உருவச் சிலை சம்பந்தமாக நடந்த சம்பவத்தை அடையாளப்படுத்தலாம். இதனடிப்படையில், பண்டாரநாயக்க உருவச் சிலை சம்பந்தமாக நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கவலையை வெளியிடுகிறது.
உடனடியாக அந்த உருவச் சிலைக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காலிமுகத் திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச் சிலை மீது நேற்று சிலர் ஏறியதுடன் சிலையின் கண்களை துணியால் கட்டி போராட்ட கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றிகரமான சந்தர்ப்பத்தை பாதுகாத்துக்கொள்ளுமாறு இளைஞர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பியதாச கூறியுள்ளார்.
“ கோட்டா கோ கமவில் உள்ள பண்டாரநாயக்க உருவச் சிலையை ஏன் உடைக்க வேண்டும் என கடந்த 22 ஆம் திகதி தமிழ் காடியன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த செய்தியில் தமிழ் காடியன் பண்டாரநாயக்கவின் கொள்கைகளுக்கு சவால் விடுத்துள்ளது. இதன் ஊடாகவே உருவச் சிலையின் கண்கள் கட்டப்பட்டதை மீண்டும் ஆராய வேண்டும்.
இதற்கு எதிராக குரல் கொடுத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் ஊடகங்கள் பார்த்தோம்.
இந்த நிலைமை மிகவும் வருத்தத்திற்குரியது
ராஜபக்சவினர் பதவி விலகும் வரை, இந்த போராட்டம் எதிர்வரும் காலத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அப்பால் சென்று பணிப்புறக்கணிப்பை நோக்கி செல்லும் எனவும் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்” எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம் News Lankasri