அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள்
தமக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தற்காலிக போட்டித்தடை மற்றும் அபராதம் என்பன தொடர்பில் மீள ஆராய்ந்து பார்க்குமாறு கோரி குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அடிப்படை உரிமை மனுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு 2 வருடகால போட்டித்தடையும், நிரோசன் திக்வெல்லவுக்கு 18 மாதகால போட்டித்தடையும் விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது.
அத்துடன், குறித்த மூவருக்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட வேண்டும் எனவும் 5 பேர் அடங்கிய விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
