வவுனியா பிரதேச செயலக பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி
வவுனியா (Vavuniya) பிரதேச செயலக பிரிவில் பன்முகப்படுத்தப்பட்ட நிதித் திட்டத்தின் கீழ் 57.4 மில்லியன் ரூபாய் நிதி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (17.05.2024)
இடம்பெற்றுள்ளது.
அத்துடன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் இந்த நிதியை பகிர்ந்தளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ கடிதங்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிகாட்டலில் பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதி வவுனியா மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 120 நிர்மாணப் பணிகளுக்கும், 46 உபகரணங்கள் வழங்கல் செயற்பாடுகளுக்கும் என 57.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் அப் பகுதி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடசாலைகள், மைதானங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்கள் என்பவற்றுக்கே இவ்வாறு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |