இலங்கையில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம்!
இலங்கையில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைவு இடைநிறுத்தப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு இராச்சிய வதிவிட அனுமதி வைத்திருக்கும் பயணிகள் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இதற்காக அவர்கள் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த விலக்குகள் பொருந்தும்.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்த விலக்குகளின் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri