ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும்..! ட்ரம்ப் சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு
புதிய இணைப்பு
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் இனி உலகிற்கு எதிரான் ஒரு ஆயுதம் பயன்படுத்தப்படாது என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான ட்ரம்ப் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஹோர்முஸ் நீரிணை வர்த்தகத்திற்கும் முழுமையான போக்குவரத்திற்கும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஈரானுடனான நமது பரிவர்த்தனை 100% நிறைவடையும் வரை, ஈரானைப் பொறுத்தவரை மட்டும் கடற்படை முற்றுகை முழு வீச்சிலும் செயல்திறனிலும் தொடரும்.
பெரும்பாலான விடயங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதால், இந்த செயல்முறை மிக விரைவாக நடைபெறும். இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! எனக் குறிப்பிட்டுள்ளார்.