நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார் : செல்வராஜா கஜேந்திரன்
கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று(09) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“கோட்டாபாய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார்.
கோட்டாபய அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆதரவு வழங்குவார்கள்.” என தெரிவித்தார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
