ஏப்ரல் மாதத்தில் தடையின்றி எரிபொருள் விநியோகம் : சுமித் விஜயசிங்க
ஏப்ரல் மாதத்தில் டீசல், பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் உள்ளிட்ட எரிபொருட்களை எந்தப் பிரச்சினையும் இன்றி வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியக் கடன் வசதியின் கீழ் அட்டவணையின் படி எரிபொருள் ஏற்றுமதிகள் பெறப்படும் என்பதால், ஏப்ரல் மாதத்தில் டீசல், பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் உள்ளிட்ட எரிபொருட்களை எந்தப் பிரச்சினையும் இன்றி வழங்க முடியும்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் எரிபொருள் பாவனை வழக்கத்திற்கு மாறாக 35% அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக ஏறக்குறைய 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய விகிதத்தில் விலை நிலையாக இருந்தால், ஆண்டு முழுவதும் எரிபொருளை இறக்குமதி செய்ய 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு எரிபொருள் இறக்குமதிக்காக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டது.
இந்த ஆண்டு மட்டும் மூன்று மாதங்களுக்குள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எரிபொருள் ஏற்றுமதி தற்போது 45 முதல் 55 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக டீசல் பாவனை அதிகரித்துள்ளதாகவும்
கடந்த வருடம் ஜனவரி மாதம் 139,000 மெட்ரிக் தொன் டீசல் மாத்திரமே நுகரப்பட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri