கள்ள சந்தையில் தண்ணீராக மாறிய எரிபொருள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க ஆசைப்பட்ட 3 பேர் சுமார் 77 ஆயிரம் ரூபாய் பணத்தினை பறிகொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவங்கள் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பண மோசடி
கனகாம்பிகை குளத்தில் 12 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு டீசல் வாங்கிய நபருக்கு டீசலுக்கு பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பாரதிபுரத்தில் 35 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்கிய நபருக்கும் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் மலையாளபுரம் பகுதியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்குவதற்கு பணம் கொடுத்த நிலையில் பணத்துடன் திருடர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர்.
கள்ள சந்தை

இவ்வாறு தினசரி கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க முயற்சித்து தினசரி பொதுமக்கள்
ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இனியும் அவதானத்துடன் இருக்க
வேண்டும்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri