எரிபொருளை ஏற்றிச் செல்லும் கொள்கலன் வண்டிகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து
கொழும்பு பம்பலப்பிட்டி மெரைன் டிரைவ் பகுதியில் தனி நபர் ஒருவருக்கு கலன்களில் எரிபொருளை வழங்கிய எரிபொருள் விநியோக கொள்கலன் வண்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விநியோகத்தில் ஈடுபடும் குழுவினர் நெறிமுறையற்ற தவறான வழியில் ஈடுபடுவது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனம் கவலையை வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விநியோக வண்டி உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை சட்டவிரோதமான முறையில் எரிபொருளை இறக்கியமை சம்பந்தமாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள மூன்று சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் எரிபொருளை எடுத்துச் செல்லும் மூன்று கொள்கலன் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri