எரிபொருள் பிரச்சினை! சேவைப்புறக்கணிப்பை விலக்கிக்கொண்ட தாங்கி ஊர்தி உரிமையாளர்கள்!
இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம், தமது புறக்கணிப்பை விலக்கிக்கொண்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்திற்கான போக்குவரத்துக் கட்டணத்தை 60 வீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை சங்கம் கோரியிருந்தது.
எனினும் அந்தக் கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படாமையை அடுத்து சேவையில் இருந்து விலகியதாக இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வை.எஸ் சில்வா தெரிவித்திருந்தார்.

இதனால் எரிபொருள் நிலையங்களுக்கான விநியோக சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று அமைச்சர் காமினி லொக்குகேயுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து சேவை புறக்கணிப்பை விலக்கிக்கொண்டுள்ளதாக சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்