யாழில் எரிபொருள் அனுமதிச்சீட்டு விநியோக வேலைத் திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான அனுமதிச்சீட்டு வழங்கும் வேலைத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் அனுமதிச்சீட்டு விநியோகம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எரிபொருள் விநியோக ஒழுங்கு முறை தொடர்பில் தேசிய ரீதியிலான வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட முன்னரே எரிபொருள் அட்டை விநியோகத்தை நாம் ஆரம்பித்துவிட்டோம்.
தேசிய ரீதியான வேலைத் திட்டம்
தேசிய ரீதியான வேலைத் திட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாம் புறக்கணிக்க முடியாது.
ஆனாலும், இங்கு எரிபொருள் அனுமதிச்சீட்டு தொடர்ந்தும் வழங்கப்பட்டு, அதன் ஊடாக விநியோக ஒழுங்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.