எரிபொருள் விநியோகம் முப்படையினரின் வசம் (Photos)
இன்று இரண்டு மணி முதல் நாடு பூராவும் எரிபொருள் விநியோகம் முப்படையினரின்
வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி- நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் டோக்கன் வழங்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
நாளை முதல் எரிபொருள் வழங்குவதில் புதிய திட்டம்! அரசாங்கம் தீர்மானம் |
டோக்கன் வழங்கிய இராணுவத்தினர்
நாளை நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலைமையில் அதற்காக நீண்ட தூரத்தில் மக்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு இராணுவத்தினர் பிற்பகல் நான்கு மணியிலிருந்து டோக்கன் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அறிந்திராத நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டோக்கன் வழங்கும் இராணுவத்தினரை "என்ன செய்கிறீர்கள்" என வினவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இவ்வாறு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.










கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
