எரிபொருள் விநியோக அட்டை கட்டாயம்: ரூபவதி கேதீஸ்வரன்

Kilinochchi Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Sudaron Jul 26, 2022 12:14 PM GMT
Report

கியூ.ஆர் கோட் முறைமை அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் வெற்றிகரமாக செயற்பட தொடங்கும் வரையில் எரிபொருள் விநியோக அட்டை பயன்பாடு கட்டாயமானது என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இது தொடர்பாக இன்று(26) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரை எரிபொருள் விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள கிராமசேவையாளர்கள் ஊடாக பெற்றுக்கொள்ளளாம்.

எரிபொருள் விநியோக அட்டை கட்டாயம்

கியூ.ஆர் கோட் அட்டையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவோர், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் இதற்கென இயங்கும் விசேட கருமபீடங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

எரிபொருள் விநியோக அட்டை கட்டாயம்: ரூபவதி கேதீஸ்வரன் | Fuel Supply Card Mandatory Qr Code Effect

எரிபொருள் பங்கீட்டு அட்டைகள் விவசாயிகள்(பச்சை), கடற்றொழிலாளர்(நீலம்), வாடகை வாகனம்(மஞ்சள்), பாரவூர்தி(செம்மஞ்சள்)), டிப்பர்(ஊதா), அத்தியாவசிய, அரச சேவை உத்தியோகத்தர்(சிவப்பு), பொதுமக்கள்(வெள்ளை) என, ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் தனித்தனியே மாவட்ட செயலகத்தால் தயாரிக்கப்பட்டு, பிரதேச செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றது.

இதுவரை இந்த விநியோக அட்டைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்கள் பகுதி கிராமசேவையாளர் ஊடாக அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

கியூ.ஆர் கோட்  அட்டை முறை அரசாங்கத்தினால் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் அறிவிப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரைபரிசீலனை செய்யப்பட்டு வெற்றியளித்துள்ளது.

ஏனைய எரிபொருள் நிலையங்களிலும் இதனை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை இதனை செய்துகொள்ளாதவர்கள் தங்கள் பகுதி பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட கருமபீடங்களின் ஊடாக இதனை செயற்படுத்திக்கொள்ள முடியும்.

எரிபொருள் விநியோக நடைமுறையானது  147,271க்கு மேற்பட்ட சனத்தொகையை கொண்ட, 1,279 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புள்ள கிளிநொச்சியிலுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய காலம் வரையில் கிளிநொச்சியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் கிடைக்கவில்லை.

ஜுன் மாத முற்பகுதியில் கிளிநொச்சி நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற பெட்ரோல் அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் சுகாதாரதுறையினருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், மேலதிமாக கல்வித்துறை சார்ந்தோர் மற்றும் அரச பொதுமக்களில் ஒரு பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இரண்டு தடவைகள் சுகாதாரத்துறையினருக்கான விசேட ஒதுக்கீடாகவே இங்கு பெற்றோல் கிடைக்கப்பெற்றிருந்தது.

சுகாதாத்துறையினருடன் கலந்துரையாடி, கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் உத்தியோகத்தர்களுக்கும் ஒரு பகுதி பெட்ரோல் வழங்கப்பட்டது.

இது தவிர, நெற்செய்கையாளர்கள் அறுவடைக்கென முன்கூட்டியே கோரியிருந்த டீசல் படிப்படியாக அவர்களுக்கு உரிய முறையில் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதுடன், சுகாதாரத்துறை உள்ளிட்ட ஏனைய சில அத்தியாவசியசேவை நிறுவனங்களுக்கு இருப்பை பொறுத்து டீசல் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விநியோகம் பெருமளவு தடைப்பட்டிருந்த காலத்தில் லங்கா ஐ.ஒ.சி நிரப்பு நிலையங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றபோதும், இந்த நிறுவனத்தின் கிளைகளோ, முகவர்களோ இல்லாத காரணத்தினால் இங்கே அந்த விநியோகத்தை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

அறிவுறுத்தல்

நீண்ட இடைவெளியின் பின்னர் இப்போதுதான் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஊடாக மீண்டும் பெட்ரோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மக்கள் இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பெருமளவில் முண்டியடிக்கும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களது நலன்களை கருத்திற்கொண்டு மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருள் கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு நிரப்பு நிலையங்களிலும் நேரடியாக நின்று பொதுமக்களுக்கு உரிய முறையில் பெட்ரோல் விநியோகம் நடைபெறுவதற்கு பாடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள் விநியோக அட்டை கட்டாயம்: ரூபவதி கேதீஸ்வரன் | Fuel Supply Card Mandatory Qr Code Effect

எரிபொருள் கிடைக்கப்பெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பெரும்பாலும் மாலை நேரங்களிலேயே எரிபொருள் கிடைக்கப்பெறுவதால் அன்றையதினமே எரிபொருள் விநியோகத்தை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

எனினும், அன்றையதினம் எரிபொருள் வரிசையில் நின்றவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விசேட தொடர் இலக்கங்கள் வழங்கப்பட்டு, அடுத்தநாள் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், அந்த நாளுக்குரிய வாகன இறுதி இலக்கங்களுக்குரியவர்களுக்கு அதன் பின்னரும் என எரிபொருள் விநியோகத்தை பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒழுங்குபடுத்தி வழங்கி வருகிறார்கள்.

இந்த அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வந்து சேர்ந்துவிட்டதாக மாவட்ட செயலகத்தால் அறிவித்தல் வழங்கப்படும் வரையில் பொதுமக்கள் வீணாக வரிசையில் நின்று சிரமங்களுக்கு உள்ளாகவேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுபோக அறுவடை செய்யும் விவசாயிகள் நெல் களஞ்சியப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US