இலங்கையில் பெட்ரோல் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் தற்போதைய சாதாரண நுகர்வு நிலவரப்படி, பெட்ரோல் கையிருப்பு குறித்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி விளக்கமளித்தார்.
நாட்டின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் பெட்ரோல் 92 ரக எரிபொருள் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் கையிருப்பு
எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், பெட்ரோல் 95 மற்றும் சூப்பர் டீசல் ஆகிய இரண்டு ரகங்களும் மே மாதம் 10 ஆம் திகதி வரை விநியோகம் செய்யப் போதுமானளவு கையிருப்பில் உள்ளன.
எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத் தேவையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மையால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri