பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் சேமிப்பகம் அமைக்க திட்டம்
விமான எரிபொருளை விற்பனை செய்ய முன்வந்துள்ள தனியார் நிறுவனம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சேமிப்பக வசதியை விரைவில் நிர்மாணிக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (08.12.2023) அமர்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தெற்குக்கு ஒரு சட்டம் எமக்கு ஒரு சட்டமா! விடுதலைப் புலிகள் தொடர்பில் ரணிலின் கருத்துக்கு சுகாஸ் பதிலடி (video)
எரிபொருள் சேமிப்பகம் நிர்மாணிப்பு
விமான நிலையத்தில் எரிபொருள் சேமிப்பகத்தை நிர்மாணிப்பதற்கு ஒரு நிலத்தை கடனாக வழங்குவதற்கு நிறுவனத்திற்கும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றின் மூலம் முதலீட்டாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விமான எரிபொருள் விநியோகத்தை தாராளமயமாக்கும் அரசாங்கக் கொள்கைக்கு இணங்க ஏலம் கோரப்பட்டது என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |