கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்த மக்கள் வீதியை மறித்து போராட்டம் (Video)
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என தெரிவித்து நேற்று மக்களிடம் இலக்க பற்றுச்சீட்டுகள் (டோக்கன்கள்) வழங்கப்பட்டுள்ளன.
இதனால் இன்று குறித்த எரிபொருள் நிலையத்திற்கு முன் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக காலையில் இருந்து மக்கள் காத்திருந்த நிலையிலும் தற்போது மண்ணெண்ணெய் இல்லையென தெரிவித்ததானால் அங்கு பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பொலிஸார் இருந்தும் நிலைமையை கட்டுபாட்டுக்குள் வர முடியாத நிலையே காணப்படுகின்றது.



