புத்தாண்டுக்கு பின் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கி விடும்
நாட்டில் தற்போது காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் நீங்கி விடும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நாட்டில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் வரிசைகளில் நிற்பதும் இல்லாமல் போய்விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்புக்கான கச்சாய் எண்ணெய் கிடைக்கும், அப்போது அனல் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்திக்கு பிரச்சினை ஏற்படாது எனவும் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இரண்டு தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் காமினி லொக்குகே, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் எரிபொருள் கொள்கலன் வண்டிகள், எரிபொருளை இறக்குவதற்கு இடமில்லாத காரணத்தினால், திரும்பி வருவதாக கூறியிருந்தார்.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
