எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மின் தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை இன்றைய தினத்துக்குள் வழங்காவிட்டால் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அனல் மின்நிலையங்கள் ஊடாகவே நாட்டின் அதிகளவு மின்சார தேவை பூர்த்தி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.
இதன் காரணமாகப் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன்று காலை முதல் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய எரிபொருள் நிறுவனம்!
ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரமே, டீசல் கையிருப்பு! முழுமையாக இருளில் மூழ்குமா இலங்கை?
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri