இலங்கையில் ஜனவரியில் எரிபொருள் தட்டுப்பாடு உறுதி ''உண்மை அம்பலம்'' (Video)
எரிபொருள் தொடர்பில் தொடர்ச்சியாகக் காணப்படும் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள அரசாங்கம் உரிய திட்டத்தை வகுக்கவில்லை என, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்குக் கூட முடியாத அளவிற்கு இலங்கை கூட்டுத்தாபனம் டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி 92 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதற்கு மாத்திரம் 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கட்டமைப்பிலான எரிபொருள் விநியோகத்தில் ஒரு நாளைக்கு மாத்திரம் சுமார் ஐயாயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயு அவசியமாகும் எனினும், தற்போதைய நிலையில் மூவாயிரம் மெற்றிக் தொன்னிற்கும் குறைந்தளவிலான எரிபொருள் தேசிய மட்டத்தில் அனைத்து சேவைகளுக்காகவும்,பொது மக்களின் நுகர்விற்காகவும் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
90 நாட்களுக்கு முன்னர் எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை உரிய நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும். ஜனவரி மாத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பெட்ரோலிய வளங்கள் கூட்டுத்தாபனம் வலு சக்தி அமைச்சிடம் கோரிய நிதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை, ஆகவே எதிர்வரும் மாதம் நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் இறக்குமதியில் தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காண
அரசாங்கம் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனவும், கூட்டுத்தாபனத்தை
இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற
சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பொதுச் சேவைகள்
சங்கத்தின் தலைவர் அசோக ரன்வெல மேலும் தெரிவித்துள்ளார்.