நாடளாவிய ரீதியில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு! வீதியினை வழிமறித்து போராட்டம் (PHOTOS)
மட்டக்களப்பில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதன்போது இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தினமும் நீண்ட வரிசைகளில் நின்று மக்கள் எரிபொருட்களை பெற்றுச்செல்வதை காணமுடிகின்றது.
இந்த நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இடையில் எரிபொருட்களை வழங்குவதனாலும் குறிப்பட்டளவிலேயே எரிபொருள் வழங்கப்படும் நிலையில் சிலருக்கு அதிகளவில் வழங்கப்படுவதாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக தினமும் எரிபொருட்கள் நிலையத்தில் பல்வேறு சம்பவங்கள்
நடைபெறுவதன் காரணமாக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
வவுனியா
வவுனியா - ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியினை வழிமறித்து இன்றிரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாவட்டத்தில் மூன்று எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வழங்கப்பட்டிருந்த போதிலும், 4ம் கட்டை மற்றும் இறம்பைக்குளம் ஆகிய எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிறைவடைந்து விட்டதுடன், ஒமந்தை ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது. அங்கு இரவு 8.30 மணியளவில் பின்னர் எரிபொருள் வழங்க முடியாது என தெரிவித்து எரிபொருள் விநியோகத்தினை இடைநிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் ஏ9 வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஓமந்தை பொலிஸார் பல முறை கதைத்த போதிலும் எரிபொருள் வழங்கும் வரை வீதினை விட்டு செல்வதில்லை என தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது.










Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
