எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்: மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை! ஜெகதீஸ்வரன் எம்.பி
எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நேற்று (02.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான யுத்தம் காரணமாக இலங்கையில் மக்கள் தமது நேரங்களை வீண் விரயம் செய்து நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்கிறார்கள்.
எரிபொருளை தடையின்றி வழங்க நடவடிக்கை
அரசாங்கம் மக்களுக்கு எரிபொருளை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 35 நாட்களுக்கு தேவையான டீசல், 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 30 நாட்களுக்கு தேவையான சுப்பர் பெற்றோல், 72 நாட்களுக்கு தேவையான சுப்பர் டீசல் என்பன கையிருப்பில் உள்ளது.

தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக பீதி அடைய வேண்டாம் என பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் கேட்டுக் கொள்கின்றோம். இலங்கை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் இருந்தே எரிபொருளை பெறுகின்றன.
அவை தொடர்ந்தும் கிடைக்கும். மக்கள் எரிபொருளை வீடுகளில் சேமித்து வைக்க வேண்டாம். அவை அர்த்தங்களை ஏற்படுத்தும். அத்துடன் கான்களில் எரிபொருள் வழக்காக வேண்டாம் என நாம் எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளோம். எனவே வீண் அச்சம் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam