பிரித்தானிய மக்களை திண்டாட வைக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! உண்மை நிலவரம் என்ன?
பிரித்தானியா தற்போது எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் பிரெஞ்சு ஐரோப்பிய விவகார அமைச்சர் Clement Beaune பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
லொறி ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா எண்ணெய் நிறுவனங்கள் புகாரளித்தால், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள்களை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது, பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன.
இதனால், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பெட்ரோல் வாங்க நாட்டு மக்களிடையே கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளதால், பதட்டதை குறைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிரித்தானியா அரசு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், competition சட்டங்களை இடைநிறுத்துவதோடு பற்றாக்குறையைப் போக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா தற்போது எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைகள், பிரெக்சிட் ‘அறிவுசார் மோசடியை’ என்பதை காட்டுகிறது என பிரெஞ்சு ஐரோப்பிய விவகார அமைச்சர் Clement Beaune பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும், பிரெக்சிட் ‘அறிவுசார் மோசடி’ என் நிரூபணம் ஆவதை நாம் காண்கிறோம் என Clement Beaune தெரிவித்துள்ளார்.