நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு: மக்கள் மீண்டும் வரிசையில் (Photos)

Fuel Price In Sri Lanka Ampara Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Farook Sihan Jun 01, 2023 05:48 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை நேற்றைய தினம் (31.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும்,  இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு: மக்கள் மீண்டும் வரிசையில் (Photos) | Fuel Shortage In Amparai

எரிபொருள் விநியோகம்

அம்பாறை மாவட்டம் - கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்தறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பெட்ரோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு நேற்றைய தினம் (31.05.2023) முதல் இன்றைய தினம் (01. 06.2023) காலை வரை எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்துள்ளது.

கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலைக்குறைப்பும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும்பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும் சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

செய்தி - பாரூக் சிஹான்

மலையகம் - அட்டன்

எரிபொருள் விலை குறைப்பு தகவல் பரவியதையடுத்து, மலையகத்தில் உள்ள பல எண்ணை நிரப்பு நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

எண்ணை விலையில் மாற்றம் ஏற்படப் போகின்றது என்று அறிந்து கொண்டு எண்ணை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பெட்ரோல் கொள்வனவு செய்யவில்லை.

இதனால் நேற்றைய தினம் (31.05.2023) இரவு அட்டன், கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பல பிரதான நகரங்களில் வானங்கள் பெட்ரோல் டீசல் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தன.

நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு: மக்கள் மீண்டும் வரிசையில் (Photos) | Fuel Shortage In Amparai

இந்த பெட்ரோல் வரிசை காரணமாகப் பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசல் நிலையும் உருவானது.

இன்றைய தினம் (01.06.2023) பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாததன் காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் உரிமையாளர்கள் தங்களுடைய தொழிலினை செய்ய முடியாது பெரும் நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு சில தனியார் பேருந்துகள், டீசல் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே தரித்து வைத்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

செய்தி - மலைவாஞ்சன்

வவுனியாவில் நீண்ட வரிசை

வவுனியாவில் எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசை. நகரிலுள்ள இரு நிலையங்களில் எரிபொருள் இல்லை. வவுனியா வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு: மக்கள் மீண்டும் வரிசையில் (Photos) | Fuel Shortage In Amparai

இந்நிலையில், வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - சான்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினம் (01.06.2023) காலையில் பெட்ரோல் எரிபொருளை பெறுவதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

கடந்த காலங்களில் கியூ.ஆர்.முறைமை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் மீண்டும் வரிசை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கிக்கப்படுகின்றது.

செய்தி - பாருக் சியான்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US