எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளது.

முழுமையான விபரம்
அதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டர் முதல் 8 லீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டர் முதல் 7லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு 40லீட்டர் முதல் 60லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கார்களுக்கு 20லீட்டர் முதல் 30லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
லொரிகளுக்கு 50லீட்டர்
முதல் 75லீட்டர்
வரையிலும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டர்
முதல் 30லீட்டர்
வரை
வான்களுக்கு 20 லீட்டர்
முதல் 30லீட்டர்
வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam