எரிபொருள் கியூஆர் குறியீடு பயன்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்ட கியூஆர் குறியீடுகளை பயன்படுத்துவதை நீக்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் இன்னும் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு
இதற்கிடையில், இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஒரு சிறிய உயர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை $80.57 ஆகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை $76.54 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக அதிகரித்துள்ள டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளைக் குறைப்பதா வேண்டாமா என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எரிபொருள் சலுகை இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எரிபொருள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ள சலே..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்