சைப்ரஸிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யும் இலங்கை
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.
சைப்ரஸின் டெரா கேவிஸ் நிறுவனத்திடமிருந்து 450,000 பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனம் சமர்ப்பித்த விலை மனுக் கோரலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 78 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது.
டொலர் பிரச்சினை காரணமாக எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கொடுப்பனவு கிடைக்கும் வரையில் எரிபொருளை விநியோகிக்காது காத்திருக்கும் நிலையை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகின்றது.
சில எரிபொருள் கப்பல்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடலில் எரிபொருளுடன் காத்திருந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு வருடாந்தம் 400 முதல் 500 ட்ரில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri