கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு
கடலிலிருந்து கொழும்பு (Colombo) துறைமுகம் ஊடாக நாட்டுக்குள் எரிபொருளை செலுத்தும் எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவமானது,நேற்று (29.05.2024) இடம்பெற்றுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்குரிய (CPC) இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்களின் கீழுள்ள (CPSTL) எரிபொருள் குழாய் ஒன்றிலேயே இவ்வாறு கசிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
இதன் காரணமாக, கடலில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் கலந்துள்ளதாகவும் எஞ்சிய எரிபொருள் கடலுக்குள் முழுவதும் கலப்பதை தடுக்க துறைமுக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த குழாயின் நிலப்பகுதியில் இன்னமும் கசிவு தொடர்வதனால் எரிபொருளை பெரிய தாங்கிகள் மூலம் அப்புறப்படுத்துவதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |