இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!
நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 76 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேற்று முன்தினம் (10) நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan