எரிபொருள் விலையை குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (28.11.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு
எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து தேர்தல் மேடைகளில் செய்த பிரசாரம் மெய்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களைப் பற்றி பேசுவதற்காகவே தம்மை மக்கள் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri