மேலும் எரிபொருள் விலையை குறைக்க முடியுமா..! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் பொருளாதாரத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) விதித்துள்ள நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளதால் எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
IMF நிபந்தனை
மேலும் தெரிவிக்கையில், நாங்களும் எரிபொருள் விலையை குறைக்க விரும்புகிறோம், ஆனால் IMF நிபந்தனைகளை நாங்கள் இன்னும் கையாள்வதால் அது தற்போதைக்கு சாத்தியமில்லை.
நாட்டின் வருமானம் மற்றும் செலவினங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திற்கு நிலையான வருமானம் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பை செயல்படுத்துவது கடினம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
