இலாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
மிக நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கி வந்த இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சினால் இவ்வருட நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எண்ணெய் இறக்குமதி சந்தைப்படுத்தலின் மூலமாக மாத்திரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 43.4 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதி

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 277.1 மில்லியன் டொலர்களும், கனிம எண்ணெய் இறக்குமதிக்காக 1,009.3 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டதாகவும், குறித்த காலகட்டத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் மொத்த மதிப்பு 877.35 மில்லியன் டொலர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கைக்கு 1,599.7 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது என்றும், இது மொத்த இறக்குமதி செலவில் 30 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam