எரிபொருள் விலை மாற்றம் குறித்து பெற்றோலியக் கூடுத்தாபனத்தின் அறிவிப்பு
எரிபொருள் விலை மாற்றம் குறித்து பெற்றோலியக் கூடுத்தாபனத்தின் அறிவிப்பு உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இலங்கையில் இப்போதைக்கு எரிபொருள் விலையைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய்
அதேவேளையில், கடந்த ஏப்ரல் மாதத்தைப் போல மிகப்பெரிய அளவில் விலை உயர்வும் ஏற்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும், விலை திருத்தம் செய்வது தொடர்பாக இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் டீசல் பேரல் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 291.82 என்ற மிக உயர்ந்த அளவை எட்டியிருந்தது. னால், தற்போது உலகச் சந்தையில் அது 140 முதல் 150 டொலர் வரை குறைந்துள்ளதால், கடந்த மாதம் இருந்த கடுமையான பொருளாதார அழுத்தம் தற்போது சற்றே தணிந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்ற நிலைமைகள் ஆரம்பமான காலகட்டத்தில், 89 முதல் 91 டொலராக இருந்த டீசல் பேரல் ஒன்றின் விலை தற்போது 150 டொலர் வரை உயர்ந்துள்ளது.
இதனால், வரும் நாட்களில் ஒருவேளை விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அது மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, நாட்டிற்குத் தேவையான கச்சா எண்ணெயைச் சுமந்து வரும் இரண்டு பிரம்மாண்ட கப்பல்கள் இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூரா நெத்திகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கிடைக்கவிருந்த பெருந்தொகை டொலர்களை தடுத்த சர்வதேச நாணய நிதியம் : சுமத்தப்படும் குற்றச்சாட்டு
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 9 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam