இலங்கைக்கு கிடைக்கவிருந்த பெருந்தொகை டொலர்களை தடுத்த சர்வதேச நாணய நிதியம் : சுமத்தப்படும் குற்றச்சாட்டு
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவிருந்த 23 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையை நாட்டுக்குள் கொண்டு வர சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என பிரபல கலைஞர் சங்கீத் விஜேசுரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இந்த தொகை கிடைக்கப் பெறவிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகமொன்றின் ஊடாக வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அநுர குமார திஸாநாயக்கவுக்காகத் தான் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததை நினைவு கூர்ந்த சங்கீத், அநுர ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு நிதி உதவி வழங்க வெளிநாட்டு ஆதரவாளர்கள் தயாராக இருப்பதாகத் தான் மேடைகளில் பகிரங்கமாகக் கூறியிருந்ததை ஒப்புக்கொண்டார்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், இலங்கைக்கு சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கத் தயாராக இருப்பதாகத் தன்னிடம் தெரிவித்தனர் என்று சங்கீத் கூறியுள்ளார்.
அவர்கள் இந்தத் தொகையை ஒரு முதலீடாக வழங்க விரும்பவில்லை. மாறாக, பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு ஒரு நேரடி நிதியுதவியாக மட்டுமே வழங்க முன்வந்தனர். கடந்த கால அரசாங்கங்களின் ஊழல்கள் மற்றும் தரகு கலாச்சாரம் காரணமாகவே அவர்கள் இதுவரை உதவி செய்யாமல் இருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த நிதியைக் கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடன் பேசியபோது, அதற்கு தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்ற பதில் கிடைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய விதிமுறைகள் மற்றும் நாட்டின் நிதிச் சட்டக் கட்டமைப்புகளின்படி, இவ்வளவு பெரிய தொகையை நேரடியாக நன்கொடையாக நாட்டுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை என்று அந்த அமைச்சர் தன்னிடம் விளக்கியதாகச் சங்கீத் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள் இன்னும் தங்கள் தாய்நாட்டின் மீது ஆழ்ந்த பற்றுடன் இருக்கிறார்கள் என்றும், சரியான ஒரு சட்டபூர்வ வழிமுறை இருந்தால் அவர்கள் இலங்கைக்கு தாராளமாக நிதிப் பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 10 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam