இந்தியாவில் விமான எரிபொருட்களின் விலை அதிகரிப்பு: விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு
இந்தியாவில் (India) விமான எரிபொருள் விலையை எரிபொருள் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
இந்த அறிவிப்பினால், ஏற்படும் இழப்பை ஈடுகட்ட விமான நிறுவனங்கள் தமது பயணக்கட்டணங்களை அதிகரிக்கும் ஏதுநிலை இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் விமானங்களுக்கான எரிபொருள் 2,941 ரூபாயால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
விமான எரிபொருள்
அது தற்போது, லீற்றருக்கு 1,318 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டெல்லியில் ஒரு லீட்டர் விமான எரிபொருள் 91,856 ரூபாய் 84 சதமாக உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவில் 85,861 ரூபாயாகவும், மும்பை மற்றும் சென்னையில் 95,231 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் கோர்ப்பரேசன் லிமிடெட், இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கோர்ப்பரேசன் ஆகியவையே விமான எரிபொருளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |