இலங்கையில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது! ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ள மக்கள்
இலங்கையில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது என மக்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
என்ற போதும் தொடர்ந்தும் எரிபொருள் நிலையங்களை நோக்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில் தமது நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் மக்கள் அனைவரும் இறப்பதற்கே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டு வந்தால் தான் நிம்மதி.
பெட்ரோலின் விலை சுமார் 400 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிகரிக்கும். ஆனால் மக்கள் முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்வதை தவிர்ப்பார்கள்.
அப்படியானால் முச்சக்கரவண்டி சாரதிகள் எப்படி வாழ்வது? ரணில் வந்தும் என்ன நடந்தது? எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 51 நிமிடங்கள் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
