எரிபொருள் விநியோகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்! விலை குறையலாம் என தகவல்
சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி நாடளாவிய ரீதியில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையான QR முறைமையின் கீழ் மாத்திரம் இன்று முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எனவே வாகனத்தின் இலக்கத்தகட்டில் உள்ள எண்ணையும், தேசிய எரிபொருள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன இலக்கத்தையும் சரிபார்த்து எரிபொருளை விநியோகிக்குமாறு சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை 1140 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்த நிலையில், வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மற்றும் கூப்பன் ஆகிய முறைமைகளில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.
வருமான வரி பத்திரம் மூலம் பதிவு வாகன செஸி இலக்கத்தின் மூலம் QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்கள் வருமான அனுமதி பத்திரம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று முதல் நடைமுறையாகும் QR முறைமையூடாக வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, ஒதுக்கீட்டு முறைமை மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஒரு வார காலம் காணப்படுவதுடன், அதனை நெருக்கடியின்றி பெற்றுக்கொள்ளுமாறு வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல் |
விநியோகத்திற்கான எரிபொருள் தொகையில் பற்றாக்குறை
இதேவேளை தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.வி.சாந்த சில்வா கூறுகையில், QR முறைமை வெற்றியளித்தாலும், விநியோகத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் தொகையில் பற்றாக்குறை நிலவுகிறது.
இதன்காரணமாக எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் மற்றும் நாமும் பாரிய நெருக்கடியை எதிநோக்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விலைச்சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் விலைத்திருத்தம் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.