இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு
எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதிய திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்
அந்த பதிவில் மேலும், பெட்ரோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த புதிய திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட முறைமையில் மாற்றுவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
A meeting with the CPC dealers association & CPC took place at the Ministry of Power & Energy. Discussed issues to related dealer margins, distribution of fuel, future developments, new fuel stations to be established.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 13, 2023
Briefed the dealers on the plans of CPC to automate all… pic.twitter.com/7KINMoPTmB