QR கோட்டா புதுப்பிக்கப்படும் தினத்தை மாற்றியதால் 300 இலட்சம் ரூபா செலவு குறைந்துள்ளது!
எரிபொருளுக்கான QR கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் தினத்தை செவ்வாய்க்கிழமைக்கு மாற்றியதன் மூலம் மாதாந்த செலவை சுமார் 300 இலட்சம் ரூபாவால் குறைக்க முடிந்துள்ளதாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை, முத்துராஜவெல மற்றும் 11 இடங்களில் உள்ள டிப்போக்களில் 195 இலட்சம் ரூபாவுக்கு காணப்பட்ட நேரடி செலவும் மின்சாரம், நீர், தொடர்பாடல், சுத்தப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கான 100 இலட்சம் ரூபா மறைமுக செலவும் மீதப்பட்டுள்ளதாக அமைச்சர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Changes to National FuelPass QR system topping up from Sunday midnight to Tuesday midnight will save approx Rs 30 million monthly. Direct cost of CPC & CPSTL Kolonnawa, Muthurajawela & 11 Regional depots every Sunday for a month is Rs 19.5 million. Indirect cost Approx 10 million pic.twitter.com/nwb9urEgiG
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 10, 2023
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR கோட்டா முறைமைமைக்கு அமைவாக, எரிபொருள் விநியோகத்தை வாராந்தம் புதுப்பிக்கும் நாள் இதற்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவாக இருந்த நிலையில், தற்போது புதுப்பித்தல் நடவடிக்கை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.