எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவரின் அறிவிப்பு
எதிர்காலத்தில் எரிபொருள் விலை தொடர்பான மானியம் வழங்குவது அல்லது விலை திருத்தம் செய்வது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்தமையினால், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நஷ்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பாக கடந்த வாரம் அனைத்து எரிபொருள் நிறுவனங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது, அந்நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளன.
அதன்படி, RM Parks நிறுவனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 173 ரூபாயும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 38.75 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், Sinopec நிறுவனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 192 ரூபாயும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 67 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

IOC நிறுவனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 136 ரூபாயும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 57 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு ஒரு தேசிய பொறுப்பு உள்ளபோதிலும், ஏனைய நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயற்படுவதனால், நஷ்டத்துடன் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது.
பேச்சுவார்த்தை முன்னெடுப்பு
அந்நிறுவனங்களுடன் கையொப்பமிடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் போது நஷ்டம் ஏற்பட்டால், அந்த நஷ்டத்தை அரசாங்கமே ஈடுசெய்ய வேண்டும் என்ற ஏற்பாடு உள்ளது.
அதற்கமைய, அந்நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதிப்பது அல்லது அரசாங்கம் தலையிட்டு மானியம் வழங்குவது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri