எரிபொருள் விலை குறைப்பு இல்லை..! இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஸ்தீரத்தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்த அறிவிப்பினை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி
இதேவேளை மத்திய கிழக்கு போரின் போது அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இன்னும் நாட்டில் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.
எனவே, இந்த நேரத்தில் எரிபொருள் விலையைக் குறைக்க இயலாது என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri