சினோபெக் எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
உடன்படிக்கை கைச்சாத்திடல்
குறித்த பதிவில், சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் இருப்பு நாளை (02.08.2023) நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெட்ரோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1st fuel cargo of Sinopec has commenced discharging & the 2nd cargo will arrive tomorrow. Entry of new retail suppliers to the domestic market will ease the forex requirements for petroleum products as the suppliers will bring in products on a 12 month financing facility from… pic.twitter.com/q7M11kvA07
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 1, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |