லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்! வெளியானது அறிவிப்பு
லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும். சூப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
