எரிபொருள் விலையுயர்வால் கொள்ளை இலாபம் ஈட்டும் இலங்கை அரசாங்கம்
அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் மூலம் கொள்ளை இலாபத்தை பெற்றுள்ளதாக எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செயததன் காரணமாகவே எரிபொருட்களின் விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 20 சதவீதத்தினால் குறைந்துள்ளது.
எனினும் அரசாங்கம் இலங்கையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் பெற்றோல், ஒக்டைன் 92 ரகத்தின் லீற்றர் ஒன்றில் அரசாங்கத்திற்கு 65 ரூபா தேறிய இலாபமாக கிடைக்கின்றது.
ஒக்டேயின் 95ல் 93ரூபாய் இலாபமாக கிடைக்கின்றது. சுப்பர் டீசலில் 48 ரூபாய் இலாபமாக கிடைக்கின்றது.
எரிபொருட்களின் இவ்வாறான விலை உயர்வு காரணமாக மக்களின் அன்றாட அத்தியவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆனந்த பாலித்த குறிப்பிட்டார்.
இதேவேளை திருகோணமலை எரிபொருள் பண்ணை தொடர்பில் இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த ஆனந்த பாலித்த, அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தில் இதுவரை காலம் மக்களை பிழையாக வழிநடத்தினார் என்றும் குற்றம் சுமத்தினார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
