கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் குழாயில் மீண்டும் கசிவு
கொழும்புத்(Colombo) துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறையில் இருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த குழாயில் தற்போதைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக கசிவு ஏற்பட்டு, அதனை சீர்படுத்திய நிலையில் குறுகிய காலத்துக்குள்ளாக மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் குழாயில் மீண்டும் கசிவு
குறித்த கசிவு நிகழும் இடத்தைக் கண்டுபிடித்து அதனை சீரமைக்க கொலன்னாவை எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை மாலை, கொழும்பு தெற்கு இறங்குதுறையின் கடற்பிராந்தியத்தில் எண்ணெய்க் கசிவுகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவைக்கான எரிபொருள் குழாயில் இருந்து கசியும் எரிபொருள் கசிவுகளே இவ்வாறு கடல் நீருடன் கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 12 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
