முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் முக்கிய அறிவுறுத்தல்
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு, அமைச்சர் கஞ்சன விஜேசேகர முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு மூலம் அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தின் புதிய முறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் |
ஜூலை 31 இற்கு முன் பதிவு
அத்துடன், எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கியூஆர் கோர்ட்டை பெற்றுக்கொள்ள முடியாதோருக்கான அறிவிப்பு
தொழிநுட்ப இடையூறுகள் காரணமாக 'கியூஆர் கோர்ட்' இதுவரை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், கிராம அலுவலர்கள் ஊடான உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் அட்டையைப் பயன்படுத்தலாம், இது தொடர்பில் மாவட்ட செயலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல இடங்களில் கியூஆர் கோர்ட்டைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனைப் பெற்றுக்கொள்வது தொடர்பான இணையத்தளத்திலுள்ள தொழிநுட்ப இடர்பாடுகள் காரணமாகவும் தடங்கல்கள் ஏற்படுகின்றன.
நாடு முழுவதும் கியூஆர் கோர்ட் திட்டம் இன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும்போது அதனைப் பெற்றுக்கொள்ள இயலாமல் இருப்பவர்களுக்கு ஏதாவது மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கும்போது, தொழிநுட்பத் தடங்கல்கள் இருக்குமாயின் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு சில விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கியூஆர் கோர்ட் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் கிராம அலுவலர்களின் உறுதிப்படுத்தல்களுடன் எரிபொருள் அட்டையைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்தி - ரகேஷ்
நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! அமைச்சரின் புதிய அறிவிப்பு |

