எரிபொருள் விநியோக அட்டை : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் குழப்பநிலை

Jaffna Vavuniya Sri Lanka Police Investigation Sri Lanka Fuel Crisis
By Erimalai Jul 24, 2022 11:12 PM GMT
Report

நாடளாவிய ரீதியில் வாகன இலக்கங்களுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றது.

யாழ்ப்பாணம்

யாழ். கல்வியங்காடு எரிபொருள் நிலையத்தில் இன்றைய தினம் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கும் கோபாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இடையிலே ஏற்பட்ட வாய் தர்க்கத்தால் இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

நல்லூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் வாகனங்களுக்கு டீசல் பெறுவதற்காக சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றுள்ளது.

குறித்த வரிசையில் நின்ற அநேகமான வாகனங்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டை இல்லாமல் தமக்கான எரிபொருளை வழங்குமாறு கோரிய நிலையில் பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த வாகன சாரதிகள் தாங்கள் கிராம சேவையாளர் இடம் சென்று தமது வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்கான பங்கீட்டு அட்டையை தருமாறு கோரியும் தமக்கு வழங்கப்படவில்லை.

நாம் கேட்டதற்கு கிராமசேவையாளர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த எரிபொருள் பங்கீட்டு அட்டை தமக்கு கிடைக்கும் எனவும் அதன் பின்னே வழங்க முடியும் என தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விநியோக அட்டை : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் குழப்பநிலை | Fuel Pass Sri Lanka Fuel Crisis Jaffna Vavuniya

மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்ட வாகன இலக்கத்துக்கு எரிபொருளை வழங்குமாறு கோரியும் தமக்கு வழங்க முடியாது என எரிபொருள் நிலையத்தினரும் பொலிசாரும் மறுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதான் போது பொலிஸாருக்கும் அங்கு நின்றவர்களுக்கும் இடையில் கடுமையான வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த கூட்டத்தில் இருந்த ஒருவரை பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு வருகை தந்த நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் வாகன சாரதிகளுடன் கலந்துரையாடிய நிலையில் நிலைமை சுகமான நிலைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா

வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.

வாகன இலக்கதகடுகளின் கடைசி இலக்கமான 0,1,2 ஆகிய இலக்க மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சொகுசு கார்கள் என்பவற்றுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் பெறுவதற்கு செல்லுமிடத்தில் வாகனங்கள் கூடியமையால் வரிசையில் நின்றோருக்கும், ஏனையவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை நிலவியது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெளுக்குளம் பொலிஸார் அமைதியின்மை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  

செய்தி திலீபன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US