மக்களை திருப்திபடுத்த எரிபொருளை முழுமையாக வழங்க வேண்டும்: கணபதிப்பிள்ளை மகேசன்
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் முழுமையாக வழங்கல் இருக்கும் போதுதான் முழுமையாக வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் எரிபொருள் நிலைமைகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று(08) யாழ்.செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது.
எரிபொருள் தட்டுபாடு
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,“எரிபொருள் தட்டுபாடு காரணமாக மிகவும் சிக்கலான நிலைமையில் தான் இருக்கின்றோம். இதனை தாண்டி மிகச் சிறந்த சவால்களை கடந்து வருகின்றோம்.
இதற்கு அனைத்து தரப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் மக்கள் காத்துக்கொண்டிருப்பதை தவிர்க்கும் வண்ணம் சில நடைமுறைகளை அமுல்ப்படுத்துகின்றோம்.
எரிபொருள்கள் நிலைமையினை பொறுத்து அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு செயற்பட்டுவருகின்றோம். அதற்கான வளங்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாதமாக வளங்கள் தடைப்பட்டு இருக்கின்றது.
விவசாயிகளை பொறுத்தவரை விவசாயிகளுக்கு பங்கீட்டு அடிப்படையில் மண்ணெண்ணைய் வழங்கப்படுகின்றது. விவசாய நடவடிக்கையினை தொடங்காத விவசாயிகள் அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டு அதன் பின்னர் அட்டை வழங்கப்படுகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
கமநல சேவை திணைக்களம் விவசாய திணைக்களத்துடன் இணைந்து விவசாயிகளின் களப்பயிற்சியினை மேற்கொண்டு மண்ணெண்ணைய் வழங்கப்படுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயம்
மாதாந்த தேவைகளை கருதி அவற்றினை கணக்கீட்டு அடிப்படையில் டிசம்பர் மாதம் வரை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். மண்ணெண்ணைய் கிடைக்கப்படுகின்ற போது அது சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
அதன்படி கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் கணிசமான நபர்களுக்கு தான் விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரப்பட்டு வருகின்றன.
நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வேண்டுகோளுக்கு இணங்க அந்த தரப்பினர்களுக்கு ஊடாக அவர்களுக்கான எரிபொருள்களை வழங்கி வருகின்றோம். இருக்கின்ற எரிபொருள்களை அத்தியாவசிய தேவைகளுக்குக்கு பயன்படுத்துவர்களுக்கு பெற்றுக்கொடுக்கின்றோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.



